MARC காட்சி

Back
நடுகல் வீரன் மற்றும் அவன் மனைவி (சதிக்கல்)
000 : nam a22 7a 4500
008 : 200521b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a நடுகல் வீரன் மற்றும் அவன் மனைவி (சதிக்கல்)
300 : _ _ |a நடுகல் சிற்பம்
340 : _ _ |a கல்
500 : _ _ |a

          இந்த நடுகல்லில் வீரமுடன் கணவனுடன் உயிர் துறந்த பெண்ணும் காட்டப்பட்டுள்ளதால் இதனை சதிக்கல் என்றும் கூறலாம். வீரனும் அவன் மனைவியும் நின்ற நிலையில் ஒரே பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளனர். வீரன் நேராக நின்ற நிலையில் கீழே தொங்கவிடப்பட்டுள்ள இரு கைகளிலும் வாளினைப் பிடித்துள்ளான். கழுத்தில் பதக்கத்துடன் கூடிய ஆரம் அழகு செய்கின்றது. இடையில் வரிந்து கட்டிய அரையாடை காணப்படுகின்றது. பக்கவாட்டு கொண்டை இருவருக்கும் தலையணியாக விளங்கினாலும் வீரனுக்கு நீண்ட முடிக்கற்றை உச்சியிலிருந்து வலதுபுறம் தொங்குகிறது. அருகில் கணவனுடன் உயிர் நீத்த வீரப்பெண்ணான அவன் மனைவி முழங்கால் வரையிலான ஆடை உடுத்தி, இரு கைகளையும் தொங்கவிட்டவாறு நேராக நிற்கிறாள். கணவன் மனைவி இணையைக் காணுகையில் தமிழரின் அகம், புறம் எனும் இரு கோட்பாடுகளிலும் வெற்றி கண்டவர்களாக புலப்படுகின்றனர்.

520 : _ _ |a

         போரில் இறந்துபட்ட வீரனுக்கும் அவனோடு உயிர்நீத்த அவன் மனைவிக்கும் எடுப்பிக்கப்பட்ட நடுகல் இதுவாகும்.  அவ்வகையில் பாகலஹள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள வீரபத்திரர் கோயில் வாசலில் திறந்தவெளியில் உள்ள இந்த நடுகல் வீரமுடன் கணவனுடன் உயிர் துறந்த பெண்ணுக்கு நடுகல் எடுப்பிக்கப்பட்டுள்ளதால் இதனை சதிக்கல் என்றும் கூறலாம். இந்நடுகல் புடைப்புச் சிற்பமாக பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விசயநகரர்-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அதில் ஒரு நடுகல்லான இந்த நினைவுக்கல் இறந்து பட்ட வீரனோடு உயிர் துறந்த அவனது மனைவியும் சேர்ந்து சிறப்பிக்கப்பட்டுள்ளமையைக் காட்டுகிறது.

653 : _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், சதிக்கல், நடுகற்கள், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், கொங்கு நாடு, தருமபுரி, தர்மபுரி, பாகலஹள்ளி, சதி, உடன்கட்டை, பெண் வீரம், வீரத்தமிழச்சி
700 : _ _ |a திரு.வேலுதரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |b வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |c பாகலஹள்ளி |d தருமபுரி |f தருமபுரி
850 : _ _ |a வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு
905 : _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 12.133277
915 : _ _ |a 78.15981
995 : _ _ |a TVA_SCL_001542
barcode : TVA_SCL_001542
book category : கற்சிற்பங்கள்
cover :
cover images TVA_SCL_001542/TVA_SCL_001542_தருமபுரி_பகலஹள்ளி-குறும்பர்மண்டு_நடுகல்-001.jpg :
Primary File :

TVA_SCL_001542/TVA_SCL_001542_தருமபுரி_பகலஹள்ளி-குறும்பர்மண்டு_நடுகல்-001.jpg